Coal India Recruitment : கோல் இந்தியா நிறுவனத்தில் 640 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!!!
Coal India Recruitment 2024:
கோல் இந்தியா நிறுவனத்தில் 640 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வின் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.Coal India Recruitment 2024 of Management Trainee : மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் 640 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள் :
பதவியின்பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்
பதவியின்பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
மைனிங் | 263 |
சிவில் | 91 |
எலெக்ட்ரிக்கல் | 102 |
மெக்கானிக்கல் | 104 |
சிஸ்டம் | 41 |
E&T | 39 |
மொத்தம் | 640 |
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு 30.09.2024 தேதியின்படி அதிகபடியான வயது வரம்பு 30 வயதாக நிரணயிக்கப்பட்டுள்ளது. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் என வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி :
- மைனிங் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு மைனிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிஸ்டம் ஆகிய பிரிவுகளுக்கு துறை சார்ந்த இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- E&T பிரிவில் சம்மந்தப்பட்ட துறையில் BE/ B.Tech/ B.Sc (Engg.) ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- துறை சார்ந்த பிரிவில் கேட் 2024 தேர்வை எழுதி இருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 என்ற விகிதத்திலும், 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், கல்வித் தகுதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.coalindia.in என்ற கோல் இந்தியாவில் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. அறிவிப்பை பார்க்க கிளிக் செய்யவும்.முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
---|---|
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 29.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.11.2024 |
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் | பின்னர் அறிவிக்கப்படும் |
0 கருத்துகள்