Apprenticeship : ஐடிஐ தகுதி போதும்; மத்திய அரசு நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்கள்!!!
Bharat Dynamics Recruitment 2024 of Apprentices : மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தெலுங்கானாவில் கிளையில் தொழிற்பயிற்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 117 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Bharat Dynamics Limited Recruitment 2024 : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்.
பணியின் விவரங்கள் :
காலிப்பணியிடங்கள்:
ஃபிட்டர், எலெக்ட்ரானிக்ஸ் மெக், மெக்கானிஸ்ட், வெல்டர், மெக்.டீசல், எலெக்ட்ரீசன், டர்னர், COPA, Plumber உள்ளிட்ட 117 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14 வயதை கடந்திருக்க வேண்டும். அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக்கூடாது.
தொழிற்பயிற்சி உதவித்தொகை :
தொழிற்பயிற்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பப்பித்தவர்களுக்கு ஐடிஐ மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தொழிற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தெலுங்கானாவில் உள்ள கிளைக்கு தொழிற்பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் https://bdl-india.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
---|---|
விண்ணப்பிக்க கடைசி நாள் | 11.11.2024 |
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் | பின்னர் அறிவிக்கப்படும் |
மத்திய அரசில் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள் படி விண்ணப்பிக்கவும்.
0 கருத்துகள்