Powergrid Recruitment 2024

 

Central govt job: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; அனுபவம் தேவையில்லை; உடனே அப்ளை பண்ணுங்க!!!



Powergrid Corporation Recruitment 2024 : மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பயிற்சி மேற்பார்வையாளர் பதவியில் இருக்கும் 70 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powergrid Corporation Recruitment 2024 of Trainee Supervisor : மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பயிற்சி மேற்பார்வையாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணியின் விவரங்கள் :

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
பயிற்சி மேற்பார்வையாளர் 70

வயது வரம்பு :

06.11.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 27 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித்தகுதி :

இப்பதவிக்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 3 ஆண்டுகள் முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.Tech/BE/M.Tech/ME ஆகிய உயர் கல்வி முடித்தவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வருடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின்னர் Sub Jr. Engineer என்ற பதவிக்கு உயர்த்தப்படுவர். இப்பணிக்கு ரூ.24,000 முதல் ரூ.1,08,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும், கொடுப்பனைகள், அகவிலைப்படிகளும் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியமாக உள்ளது. சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் Regional ஆட்சேர்ப்பு கீழ் இருக்கும் அறிவிப்பை படித்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள் :

விவரம்

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்

06.11.2024

அட்மிட் கார்டு வெளியீடு

பின்னர் அறிவிக்கப்படும்

எழுத்துத் தேர்வு

டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025


டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்களுக்கு இந்த அறிவிப்பு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஒரு எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படுகிறது. எனவே ஆர்வமும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்