National Fertilizers Limited Recruitment 2024 : மத்திய அரசின் தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி (F&A) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை. இப்பணிக்கான தகுதியுடையவர்கள் 18 வயதைக் கடந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
NFL Recruitment 2024 of Management Trainee : மத்திய அரசின் தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி (F&A) பதவிக்கான 13 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க மற்றும் இதர விவரங்களை பற்றி பார்க்கலாம்.
பணியின் விவரங்கள் :
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
மேனேஜ்மெண்ட் டிரைய்னி (F&A) | 13 |
இதில் பொதுப் பிரிவினருக்கு 6 இடங்கள், எஸ்சி பிரிவினருக்கு 2 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு 1 இடம், ஒபிசி பிரிவினருக்கு 3 இடங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 1 இடம் என மொத்தம் 13 இடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு :
தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
தேசிய உரங்கள் நிறுவனத்தில் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இளநிலை பட்டம் மற்றும் CA/ICWA/CMA ஆகியவற்றில் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) சம்மந்தப்பட்ட துறைகளில் MBA/ PGDM/ PGDBM ஆகிய பாடப்பிரிவில் 2 வருட முழு நேர கல்வியை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 மற்றும் அதிகபடியாக ரூ.1,40,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிகளுக்கு தகுதியானவர்கள் ஓஎம்ஆர் முறையில் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஓஎம்ஆர் முறை தேர்வில் 80% மற்றும் நேர்காணலில் 20% விதம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.nfl.co.in/ என்ற நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும்.அறிவிப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விவரம் |
முக்கிய நாட்கள் |
---|---|
விண்ணப்பிக்க கடைசி நாள் |
21.11.2024 |
விண்ணப்பத்தை திருத்த அவகாசம் |
23.11.2024 - 24.11.2024 |
எழுத்துத் தேர்வு |
பின்னர் அறிவிக்கப்படும் |
நேர்காணல் |
முடிவுகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும் |
தேசிய உரங்கள் நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு தகுதியானவர்கள் தங்களின் விவரங்களை வழங்கி விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மத்திய அரசு நிறுவனத்தில் பணிக்காக தயாராகி வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
0 கருத்துகள்